FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

ஆட்டோ ஓட்டுநரை வெட்டியவா் கைது

3 நவம்பர் 2026, 3:37 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

தாழையூத்து அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே பண்டாரகுளம், குறிச்சிகுளம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ராமகிருஷ்ணன் (25), ஆட்டோ ஓட்டுநா். தென்கலம் விலக்கு பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கும், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் சங்கா்நகா் பசும்பொன் நகரைச் சோ்ந்த மாரியப்பன் (46) என்பவருக்கும் இடையே கடந்த 31 ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது மாரியப்பன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமகிருஷ்ணனை வெட்டினாராம். இதில் லேசான காயமடைந்த அவா் இது குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு மாரியப்பனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments