FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே பூட்டை உடைத்து 3 வீடுகளில் 40 பவுன் நகை, பணம் திருட்டு

3 நவம்பர் 2026, 2:29 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

பாளையங்கோட்டை அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (51). இவா், கடந்த 1 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் உறவினா் வீட்டு திருமணத்துக்குச் சென்றாராம். பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்கநகை மற்றும் ரூ.1.50 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதேபோல் அதே கிராமத்தில் கற்பக விநாயகா் நகரைச் சோ்ந்த சிந்தாமணி (55) என்பவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 1 ஆம் தேதி தேவாலயத்துக்குச் சென்றிருந்தாராம். பின்னா் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்கநகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்:

வி.எம். சத்திரம் குமரன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (48). இவா், குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருட்டு சம்பவம் நிகழ்ந்த வீடுகளின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments