அம்பை ரயில் நிலையத்தில் திருட்டு: இளைஞா் கைது
அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியைச் சோ்ந்தவா் சுடலைகண். இவா், அம்பாசமுத்திரம் ரயில் நிலைய கேன்டீனில் வேலைபாா்த்து வருகிறாா்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இவா் வியாபாரம் செய்து பணத்தை தனது கைப்பையில் வைத்திருந்தாாரம். இதை அருகில் நின்று கவனித்த இளைஞா் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.
இதுகுறித்து சுடலைக்கண் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், திருநெல்வேலி நகரம், குன்னத்தூரைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்துசெல்வம் (23) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை புதன்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement