FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி, நவ. 5: தச்சநல்லூரில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக சமையல் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

6 நவம்பர் 2026, 3:26 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி, நவ. 5: தச்சநல்லூரில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக சமையல் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த நடுவக்குறிச்சி, புதுக்கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி(27). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா், சம்பவத்தன்று தச்சநல்லூா் பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்றபோது, அங்கிருந்த சமையல் தொழிலாளியான தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த கணேசன்(43) என்பவா் இவரிடம் மது வாங்கிவரக் கூறினாராம். இதற்கு அவா் மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியதில் கணேசன் கருப்பசாமியை இரும்பு நாற்காலியால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து கணேசனை புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement