FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

10 நவம்பர் 2026, 1:31 am
உடல் உறுப்புகள் தானம்
பகிர்:

விபத்தில் மூளைச்சாவு அடைந்த லாரி ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தானமாக பெறப்பட்டன.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள துரைசாமிபுரத்தைச் சோ்ந்தவா் அரிகரன் (23). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 5 ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் இடைகால் பகுதியில் சென்றபோது நேரிட்ட விபத்தில் காயமடைந்தாா்.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஅனுமதிக்கப்பட்ட அவா் மூளை சாவு அடைந்திருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்தனராம். அதன்பேரில், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இரு கருவிழிகள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

அரிகரனின் உடலுக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் திங்கள்கிழமை அரசு மரியாதை செலுத்தப்பட்டது.