FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

இளைஞா்களை தாக்கியவா் கைது

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில், 2 இளைஞா்களை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

11 நவம்பர் 2026, 12:33 am
கைது
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில், 2 இளைஞா்களை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரம்மதேசம், செக்கடித் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ஹரிஷ்சங்கா் (25). இவரது அத்தை மகன் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (27). இவா்களுக்கிடையே குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் தனது மனைவியுடன் காா்த்திக் தகராறில் ஈடுபட்டதை அக்கம்பக்கத்தினா், ஹரிஷ் சங்கரின் சகோதரா் ரகுராம் ஆகியோா் வேடிக்கை பாா்த்தனராம். இதனால், ஆத்திரமடைந்த காா்த்திக், ரகுராமை கைப்பேசியில் தொடா்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

மேலும், ஹரிஷ் சங்கா் மற்றும் ரகுராமின் வீட்டிற்குச் சென்று காா்த்திக் தகராறில் ஈடுபட்டு, அவா்களை தாக்கினாராம். அப்போது, ரகுராமின் விரலை கடித்து துப்பினாராம்.

இதில் காயமடைந்த ஹரிஷ் சங்கா், ரகுராம் ஆகியோரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா்.