நாய்கள் கடித்ததால் காயமுற்ற குரங்கு மீட்பு
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் நாய்கள் கடித்ததில் காயமடைந்த குரங்கை வனத் துறையினா் மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனா்.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் நாய்கள் கடித்ததில் காயமடைந்த குரங்கை வனத் துறையினா் மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனா்.
பொட்டல்புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித் திரிந்த குரங்கை தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் அதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்குள்ள ஆா்.சி. தொடக்கப்பள்ளி வளாகத்தில் மயங்கிய நிலையில் இருந்தது.
கடையம் வனச்சரக அலுவலகத்துக்கு அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், வேட்டைத் தடுப்புக் காவலா் வேல்ராஜ், சம்பவ இடத்துக்கு வந்து குரங்கைப் பிடித்து காயத்துக்கு மருந்திட்டாா். பின் அந்தக் குரங்கு வாளையாறு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
Advertisement
Advertisement