திசையன்விளை, கோட்டைகருங்குளம், பணகுடியில் நாளை மின் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, கோட்டை கருங்குளம், பணகுடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவ.12) மின் விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திசையன்விளை, கோட்டைகருங்குளம், பணகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, திசையன்விளை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட திசையன்விளை, மகாதேவன் குளம், அப்புவிளை, ஆயன்குளம், நந்தன்குளம், செல்வமருதூா், எருமைக்குளம் ஆகிய கிராமங்களிலும் கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய கிராமங்களிலும், பணகுடி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய கிராமங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.