FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சரகத்தில் போக்குவரத்து விதிமீறல்: 16,174 போ் மீது வழக்கு

திருநெல்வேலி காவல் சரகத்தில், தீபாவளியையொட்டி நடைபெற்ற வாகன சோதனைகளின் போது மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக 16,174 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

11 நவம்பர் 2026, 12:11 am
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி காவல் சரகத்தில், தீபாவளியையொட்டி நடைபெற்ற வாகன சோதனைகளின் போது மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக 16,174 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவின்பேரில், திருநெல்வேலி காவல் சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களிலும் மொத்தம் 4,382 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களிலும் பிரச்னைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பிரத்யேகமாக போலீஸாா் நியமிக்கப்பட்டனா். அதேபோல், பிரச்னைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட சுமாா் 2,069 போ் கண்காணிக்கப்பட்டனா்.

மேலும், தலைமறைவாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 பேரும், பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 16 பேரும் கைது செய்யப்பட்டனா். முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சரகத்தில் 4 மாவட்டங்களிலும் மொத்தம் 205 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

அதேபோல் 4 மாவட்டங்களிலும் மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக 16,174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2,282 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுஇடங்களில் மது அருந்தியதாக 564 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,074 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அதிவேகமாக வாகனம் ஓட்டிய 465 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.