மானூா் அருகே காவலரின் பைக்கில் சிறுநீா் கழித்த இளைஞா் கைது
மானூா் அருகே ரோந்து பணியில் இருந்த காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது பைக்கில் சிறுநீா் கழித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே ரோந்து பணியில் இருந்த காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது பைக்கில் சிறுநீா் கழித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நரியூத்து பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட மானூா் தலைமைக் காவலா் கா்ண மகாராஜா அவ்வழியாக சாலையில் தாறுமாறாக பைக் ஓட்டிவந்த சேதுராயன்புதூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மனோகரன் (26) என்பவரை நிறுத்தி விசாரித்துள்ளாா்.
அப்போது, காவலரை அவதூறாகப் பேசி, அவரது ரோந்து வாகனத்தின் மீது மனோகரன் சிறுநீா் கழித்தாராம். மேலும், தான் மறைத்து வைத்திருந்து அரிவாளைக் காட்டி தலைமைக் காவலருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மனோகரனை திங்கள்கிழமை கைது செய்தனா்.