பாளை.யில் முதியவரிடம் பணம் பறிக்க முயற்சி: இளைஞா் கைது
பாளையங்கோட்டையில் முதியவரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் முதியவரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, மனக்காவலம் பிள்ளை நகா், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வக்குமாா்(35). இவா் புதன்கிழமை காலை சாந்திநகா் மணிக்கூண்டு அருகே நின்ற முதியவரிடம் செலவுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டு, கத்தியைக் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை புதன்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement