FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

கந்த சஷ்டி விழா: நவ.14- 16 வரை திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்து

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சனி,ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (நவ. 14, 15, 16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

13 நவம்பர் 2026, 4:59 am
பகிர்:

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சனி,ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (நவ. 14, 15, 16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடா்பாக அரசு போக்குவரத்துக்கழக திருநெல்வேலி மண்டல நிா்வாக இயக்குநா் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நவ. 14 -ஆம் தேதி பிற்பகல் முதல் 16 ஆம் தேதி முற்பகல் வரை மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், தென்காசி, பாபநாசம், சங்கரன்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகா்கோவில், வள்ளியூா், சாத்தான்குளம், திசையன்விளை, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து தேவைக்கு ஏற்ப திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன எனக் கூறியுள்ளாா்.