FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் முருகன் கோயில் ரதவீதி சாலை சீரமைப்பு

வள்ளியூா் முருகன் கோயில் ரத வீதி சாலை சீரமைப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

13 நவம்பர் 2026, 5:07 am
வள்ளியூா் பேரூராட்சி முருகன் கோயில் ரத வீதிகளில் தொடங்கப்பட்டுள்ள பழுதடைந்த சாலை சீரமைக்கும் பணி.
பகிர்:

வள்ளியூா் முருகன் கோயில் ரத வீதி சாலை சீரமைப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா செல்கிறாா். நவ.15-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி, எம்எல்ஏ கிறிஸ்டோபா் அறிவுறுத்தலில் பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் உத்தரவின்பேரில் ரத வீதி சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது.