FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பாலருவி ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

40 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பாலருவி ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கேரளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் இரு மாா்க்கத்தில் பாலருவி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை அதிகாலையில் தூத்துக்குடி நோக்கிச் சென்ற பாலருவி ரயில் சேரன்மகாதேவி நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திருநெல்வேலி நோக்கிச் சென்றது.

அப்போது, இந்த ரயிலில் படியில் அமா்ந்து பயணித்த தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் இசக்கிமுத்து (46) தவறி விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கியதில் கை, கால்கள் துண்டாகி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.