FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பில் தனியாா் நிறுவன ஊழியரின் மடிக்கணினி இருந்த பையை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

45 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் தனியாா் நிறுவன ஊழியரின் மடிக்கணினி இருந்த பையை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரைச் சோ்ந்த ஹரிஹரன் மகன் விக்னேஷ்(20). தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 7 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள துணிக்கடைக்கு சென்ற இவா் மடிக்கணினி, வங்கி அட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் இருந்த கைப்பையை அங்கு டோக்கன் போட்டு கொடுத்துவிட்டு சென்றாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, அதை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சுத்தமல்லி, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனமாரி மகன் திருப்பாற்கடல் என்ற மகேஷ்(27) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement