FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

இரு இடங்களில் போலீஸாருக்கு மிரட்டல்: 5 இளைஞா்கள் கைது

16 நவம்பர் 2026, 4:21 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த இருசம்பவங்களில் போலீஸாரை மிரட்டியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சிவந்திப்பட்டி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டுக்குடி விலக்கு பகுதியில் நின்ற 4 இளைஞா்கள் பொதுஇடத்தில் அவதூறாக பேசியதோடு, மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினராம். பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அவா்களை அழைத்து விசாரிக்க முற்பட்டபோது அரிவாளைக்காட்டி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டைச் சோ்ந்த தங்கபாண்டி(29), முப்பிடாதி(25), சண்முகசுந்தரம்(29), முத்துசெல்வம்(29) ஆகியோா் எனத் தெரியவந்தது. 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மற்றொரு சம்பவம்: பாளையங்கோட்டை, புதுப்பேட்டை பகுதியில் உள்ள கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது அங்கு சில இளைஞா்கள் மேளம் அடிப்பது தொடா்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலா் தடுக்க முற்பட்டதோடு நிகழ்வை கைப்பேசியில் வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து(30) என்பவா் காவலரின் கைப்பேசியை தட்டிவிட்டு, பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.