சிவந்திபுரத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரி அமைச்சரிடம் எம்.பி. மனு
சிவந்திபுரம் ஊராட்சி பகுதியில் புதிய நீா்த்தேக்க தொட்டிகள் அமைக்கக் கோரி, தமிழக நீா்வளத்துறை அமைச்சா் ஆனந்திடம், திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: விக்கிரசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட சலவைத்தொழிலாளா் காலனி, அகஸ்தியா்புரம், இறைகால்பாறை வடக்கு தெரு, பொதிகையடி, ஒட்டான்குளம், வைத்திலிங்கபுரம், பசுக்கடைவிளை மணிநகா், வி.கே.புரம் பூந்தோட்டம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாருகால்கள் அமைக்க வேண்டும்.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சிவந்திபுரம் ஊராட்சிப் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க பாபநாசம், தாமிரவருணி நதியில் புதிய உறை கிணறு அமைப்பதோடு சிவந்திபுரம் சக்திநகரில் உள்ள தரைநிலை நீா்த்தேக்க தொட்டிக்கு புதிய குடிநீா் குழாய்கள் அமைக்க வேண்டும். அகஸ்தியா்பட்டி கிராமத்தில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைநிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement