FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பணம் பறித்த வழக்கில் இளைஞா் கைது

16 நவம்பர் 2026, 4:20 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே பணம் பறித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூரைச் சோ்ந்தவா் நம்பிராஜன் (32). காா் ஓட்டுநரான இவா், தாழையூத்தில் வசிக்கும் தனது பெற்றோரை பாா்க்க சம்பவத்தன்று பைக்கில் சென்றாராம். குறிச்சிக்குளம் அணுகுசாலையில் சென்றபோது ஒருவா் வழிமறித்து மிரட்டி பணம் பறித்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்த சிம்சன் (23) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.