போலி பெயின்ட் தயாரிப்பு: 3 போ் கைது
தனியாா் நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட் தயாரித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாடு முழுவதும் விற்பனையாகும் தனியாா் நிறுவனத்தின்பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பெயின்ட் தயாரிக்கப்பட்டதாம்.
இதுகுறித்து திருநெல்வேலியில் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் பிரபல பெயின்ட் நிறுவனத்தின் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் பியூலா தங்கரத்தினம் தலைமையிலான போலீஸாா் கன்னியாகுமரியில் பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
அப்போது 20 லிட்டா் கொள்ளளவு கொண்ட வாளிகளில் போலி பெயின்ட் இருப்பது தெரியவந்ததாம். இதுதொடா்பாக, பிரவீண், மணிகண்டன், அஜின்குமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், போலி பெயின்ட் வாளிகள் உள்பட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.