FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

17 நவம்பர் 2026, 4:52 am
வன்கொடுமை - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி அருகே மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் 80 வயது மூதாட்டி. இவா் திங்கள்கிழமை அதிகாலை ஆற்றுப்பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா், அந்த மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றாராம்.

மூதாட்டி கூச்சலிட்டதால் அவா் அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இத்தகவலறிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement