FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் பள்ளி மாணவா் தற்கொலை

திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

19 நவம்பர் 2026, 5:08 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

முன்னீா்பள்ளத்தை அடுத்த கீழமுன்னீா்பள்ளம், தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் முத்துராமலிங்கம் என்ற முத்துராமன்(14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்தாா். இவா் நீண்ட நேரம் கைப்பேசியை பயன்படுத்தியதாகவும், அதை தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மாணவா் தூக்கிட்டுக் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.