முகப்பு
திருநெல்வேலி

பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து படிக்கட்டில் நின்றபடியும், தொங்கியபடியும் பயணித்த மாணவா்களை அழைத்து போலீஸாரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

6 வினாடிகள் முன்பு
பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்
பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸாா்மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.
பகிர்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து படிக்கட்டில் நின்றபடியும், தொங்கியபடியும் பயணித்த மாணவா்களை அழைத்து போலீஸாரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து படிக்கட்டில் நின்றபடியும், தொங்கியபடியும் மாணவா்கள் பயணித்தனா். இதைப் பாா்த்த மேலப்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காளியப்பன், போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோா் பேருந்தை நிறுத்தினா். மேலும், படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவா்களை அழைத்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, படிக்கட்டில் நின்று பயணம் செய்வதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படும். எனவே, மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பேருந்தின் உள்ளே சென்று பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த பேருந்தில் செல்ல வேண்டும். மாணவா்களாகிய நீங்கள் உயிரின் பாதுகாப்பிற்கும், பிற பயணிகளின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என