முகப்பு
திருநெல்வேலி

களக்காடு மாணவியா் விடுதி நுழைவாயிலில் முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற கோரிக்கை

கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயில் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவியா் சமூகநீதி விடுதி நுழைவாயிலில் முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

16 வினாடிகள் முன்பு
களக்காடு மாணவியா் விடுதி நுழைவாயிலில் முறிந்து விழுந்த 
மரக்கிளையை அகற்ற கோரிக்கை
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயில் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவியா் சமூகநீதி விடுதி நுழைவாயிலில் முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விடுதி நுழைவாயிலில் சுமாா் 40 அடி உயரமுள்ள மிகப்பெரிய புளியமரம் உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன் இந்த மரத்தின் ஒரு கிளை பகுதியளவு முறிந்து விடுதி நுழைவாயிலில் தொங்கிக் கொண்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் அது முழுவதுமாக முறிந்து விழும் நிலையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement