பாளை. மத்திய சிறை தண்டனை கைதி உயிரிழப்பு
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாளை. மத்திய சிறை தண்டனை கைதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாளை. மத்திய சிறை தண்டனை கைதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா் ஜெயபாலன்(70).
இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அங்கு ஜெயபாலன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement