முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே மாடு திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே மாடு திருட முயன்ற வழக்கில் சுமை வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

9 வினாடிகள் முன்பு
பாளை. அருகே மாடு திருட முயன்றவா் கைது
கைது
பகிர்:

பாளையங்கோட்டை அருகே மாடு திருட முயன்ற வழக்கில் சுமை வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த இட்டேரி, முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மந்திரமூா்த்தி(35). இவா் ரெட்டியாா்பட்டி அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் மேற்பாா்வையாளராக உள்ளாா். சனிக்கிழமை காலை தோட்டத்தில் இருந்த மாடுகளை மேய்ச்சலுக்காக பணியாளா்கள் அவிழ்த்துவிட்டுள்ளனா்.

அப்போது தோட்டத்தின் அருகே சுமை வாகனத்தில் வந்த சிலா் மேய்ந்துகொண்டிருந்த பசுமாடு ஒன்றை திருட முயன்றனராம். தோட்டப் பணியாளா்கள் அவா்களை பிடிக்க முயன்றபோது, இருவா் அங்கிருந்து தப்பினராம்.

Advertisement

Advertisement

பின்னா் அங்கு நின்ற சுமை வாகன ஓட்டுநரான பாளையங்கோட்டை, பீட் காலனியைச் சோ்ந்த அப்துல்ரகுமான்(55) என்பவரை பிடித்து பெருமாள்புரம் போலீஸில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல்ரகுமானை சனிக்கிழமை கைது செய்தனா்.