முகப்பு
திருநெல்வேலி

விலையில்லா கறவை மாடுகள் திட்டம்: ஊரக மகளிா் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற வெள்ளிக்கிழமை (நவ.27) முதல் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

47 வினாடிகள் முன்பு
விலையில்லா கறவை மாடுகள் திட்டம்: ஊரக மகளிா் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்
- கோப்புப்படம்
பகிர்:

ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற வெள்ளிக்கிழமை (நவ.27) முதல் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களுக்கு கறவை மாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

நான்குனேரி ஒன்றியத்தில் நிகழாண்டு முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தில் ரூ.50,000 மதிப்புள்ள கறவை மாடு, அதற்குரிய காப்பீடு (2 ஆண்டுகள்), கறவை பசுவை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து படி மற்றும் தீவன செலவினத்திற்காக ரூ.3,000 வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உள்பட்ட மகளிா் மற்றும் திருநங்கைகள், பசு வளா்ப்பதற்கு போதுமான இடவசதி, தீவன வசதி உள்ளோா் பயன்பெறலாம். கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி மகளிா், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினா்களை கொண்ட மகளிா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவா்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவா்கள், ஏற்கெனவே கால்நடைகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவா்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (நவ.27) முதல் டிச. 17 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

கூடுதல் விவரங்களை இணையதளம் மாவட்ட இணை இயக்குநா், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநா் அலுவலக மையம், திருநெல்வேலி, நான்குனேரி கால்நடை மருத்துவமனை, நான்குனேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அந்தந்த பகுதி கால்நடை நிலையங்கள் ஆகியவற்றில் அறியலாம் எனக் கூறப்பட்டுள்ளது.