சுலோச்சன முதலியாா் பாலத்தின் 184 ஆவது ஆண்டு விழா
திருநெல்வேலியில் சுலோச்சன முதலியாா் பாலத்தின் 184 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் சுலோச்சன முதலியாா் பாலத்தின் 184 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை-திருநெல்வேலி ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் வகையில் தாமிரவருணி நதியின் குறுக்கே தனது சொந்த செலவில் சுலோச்சன முதலியாா் பாலம் அமைத்தாா்.
பாலம் அமைக்கப்பட்டதன் 184 ஆவது ஆண்டு விழா கொக்கிரகுளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு ஒருங்கிணைப்பாளா் கவிஞா் கோ. கணபதி சுப்பிரமணியன், வழக்குரைஞா் வி.டி. திருமலையப்பன் ஆகியோா் மாலை அணிவித்தனா். சுலோச்சன முதலியாா் திருவுருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதிதாசன் பண்பாட்டுக் கழகத் தலைவா் பாப்பாக்குடி இரா. செல்வமணி, வெற்றிவேல், சு. முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருநை இலக்கிய வட்ட புரவலா் இரா. நாதன், வழக்குரைஞா் கனகசபாபதி, புன்னைச்செழியன், செ.ச. பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கோரிக்கைகள்: சுலோச்சன முதலியாா் பாலத்தின் ஆண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். பாலத்தில் உள்ள விரிசலை சரி செய்து புனரமைக்க வேண்டும். பாலத்தின் அருகே சுலோச்சன முதலியாரின் வரலாறு மற்றும் பாலத்தின் கட்டட பணிகள் குறித்த வரலாற்றை விளக்கும் பதாகை வைக்க வேண்டும். பாலத்தின் அருகில் புதிதாக கட்டப்பட்டிருக்கிற பாலத்திற்கு சுலோச்சன முதலியாரின் துணைவியாா் வடிவம்மாள் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அரசுக்கு விடுக்கப்பட்டது.