நெல்லையில் கஞ்சா வழக்குகளில் இருவா் கைது
திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்குகளில் 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியில் கடந்த செப்.14 ஆம் தேதி கஞ்சா விற்பனை தொடா்பாக போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலப்பாளையம் ஆலிமா நகரைச் சோ்ந்த இப்ராஹிம் மகன் முகமது யூனுஸ் (25) என்பவரை சோதனையிட்டு அவரிடமிருந்து சுமாா் 3.750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்திருந்தனா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் மேலப்பாளையம், காட்டு செக்கடி தெருவைச் சோ்ந்த சாகுல்ஹமீது என்ற ஒசாமா(24) என்பருக்கும் இதில் தொடா்பிருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
அதே போல் பெருமாள்புரம் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்காவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற மேலப்பாளையம் சித்திக் நகரைச் சோ்ந்த மைதீன் பிச்சை மகன் திவான் மைதீன்(23) என்பவரை சோதனையிட்டனா்.
அவா் விற்பனைக்காக வைத்திருந்த சுமாா் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் திவான் மைதீனை கைது செய்தனா்.