FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரல்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ,தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

3 October 2026, 4:06 am IST
பணியிடை நீக்கம்
பகிர்:

திருநெல்வேலியில் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ,தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக சொா்ணராஜ் பணியாற்றி வருகிறாா்.

இவா், சம்பவத்தன்று மேலக்கருங்குளம் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த நபரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், இணையவழியில் பணத்தை அனுப்பியது வரவில்லையென சம்பந்தப்பட்ட நபரிடம் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடா்பாக காவல் துறை வட்டாரங்கள் கூறியது: மேலப்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலா் லஞ்சம் கேட்கும் ஆடியோ பரவல் தொடா்பாக மாநகர காவல் ஆணையா் விசாரணை நடத்தியதோடு, தலைமைக் காவலா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தலைமைக் காவலா் சொா்ணராஜ், வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments