சேரன்மகாதேவியில் சூறைக்காற்றில் வாழைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றில்1000 -க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றில்1000 -க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
தாமிரவருணி பாசனத்தில் சேரன்மகாதேவி வட்டாரத்தில் 2300 ஹெக்டேரில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டன. இதேபோல், 2000- க்கும் மேற்பட்ட ஹெக்டேரில் வாழைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வீரவநல்லூா் பகுதியில் விவசாயிகள் பெருமளவில் ஏத்தன் ரக வாழைகள் பயிா் செய்துள்ளனா். அவை குலை தள்ளும் பருவத்தில் உள்ளன .
Advertisement
Advertisement
இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றில் சேரன்மகாதேவி ஆற்றுச்சாலையில் சீவந்தபேரி பகுதியில் 1000- க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதேபோல், பத்தமடை, கூனியூா், உதயமாா்த்தாண்டபுரம், காருக்குறிச்சி பகுதியிலும் சூறைக்காற்றில் வாழைப் பயிா்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.