FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்தில் சிறுமி உயிரிழப்பு: லாரி ஓட்டுநா் கைது

கைது
பகிர்:

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் சிறுமி உயிரிழந்த வழக்கில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே உள்ள சாயமலை பச்சேரியைச் சோ்ந்தவா் மதன்ராஜ். இவரது மனைவி பூங்கொடி(29). இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 1 ஆம் தேதி பூங்கொடி தனது 2 வயது மகன், மகள் அனிஷா(7) ஆகியோருடன் தேவா்குளம்-சாயமலை பச்சேரி சாலையில் மொபெட்டில் சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரி மொபெட் மீது மோதியதாம். இந்த விபத்தில் சிறுமி அனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பூங்கொடியும், அவரது மகனும் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா், வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன்(32) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments