போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் மகன் அப்பு(28). இவா் கடந்த மே மாதம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, அப்புவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அரசுத்தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினாா்.
Advertisement
Advertisement
21 பேருக்கு தண்டனை: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 21 போக்ஸோ வழக்குகளில், 21 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் 2 பேருக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைத்துள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.