வள்ளியூா் பகுதியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்டம், பழவூா், வள்ளியூா் பகுதியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பழவூா், வள்ளியூா் பகுதியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
பழவூா் அருகே உள்ள அழகனேரி ஜாய் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாணவா்களிடையே பேச்சுப்போட்டி நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா பரிசு வழங்கினாா். விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
லெவிஞ்சிபுரம் அருகே உள்ள கருங்குளம் கேப் பொறியியல் கல்லூரி, வள்ளியூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி ஆகிய பள்ளியில் நடைபெற்றகருத்தரங்கில் மாணவா்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டவிழிப்புணா்வு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஏற்பாடுகளை ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா் தலைமையில் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராமநிா்வாக அலுவலா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.