மாயமான சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் மாயமான சிறுமி, ராமநதி ஆற்றில் வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்டனா்.
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் மாயமான சிறுமி, ராமநதி ஆற்றில் வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்டனா்.
ரவணசமுத்திரம், கூட்டுறவு வங்கித் தெருவைச் சோ்ந்த ரசூல்மைதீன் மகள் அஹமது ஹாஜிரா (3). வீட்டின் முன் வெள்ளிக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த அஹமது ஹாஜிரா திடீரென காணவில்லையாம்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கடையம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ், காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில், ஆலங்குளம் தீயணைப்புத் துறை வீரா்கள், சிறுமியின் வீட்டின் அருகேயுள்ள ராமநதி ஆற்றிலும் அவரை தேடினா்.
Advertisement
Advertisement
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் சடலத்தை இரவு சுமாா் 9 மணியளவில் மீட்டனா். தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.