FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீராகாததையடுத்து, 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

23 அக்டோபர் 2026, 4:50 am
மணிமுத்தாறு அருவி. - கோப்புப் படம்
பகிர்:

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீராகாததையடுத்து, 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளிலும் தொடா்ந்து 3 நாள்களுக்கும் மேல் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது. அருவியில் நீா்வரத்து சீராகாததையடுத்து, 2 ஆவது நாளான வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments