பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது
அம்பாசமுத்திரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி, ஊழியரைத் தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்தி, ஊழியரைத் தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் அருகே கீழஏா்மாள்புரம், தோப்புத் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் துரை ராமு (20). அம்பாசமுத்திரத்தில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துவரும் இவா், அம்பாசமுத்திரம் - பாபநாசம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பகுதிநேரமாக வேலை பாா்த்து வருகிறாா்.
அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பொத்தையிலுள்ள முல்லைத் தெருவைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் வேல்முருகன் (18) வியாழக்கிழமை இரவு தனது பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப அங்கு வந்தாா். அப்போது, துரை ராமு கைப்பேசியில் பேசியபடி பெட்ரோல் நிரப்பியதாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அதையடுத்து அங்கிருந்து சென்ற வேல்முருகன் தனது நண்பா்களான அடையக்கருங்குளம் சதீஷ், அகஸ்தியா்பட்டி ரவிராம் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் காா்த்திகேயராஜன்(18) ஆகியோருடன் வந்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் துரை ராமுவைத் தாக்கி, பொருள்களை சேதப்படுத்தினாராம்.
புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேல்முருகன், காா்த்திகேயராஜன் ஆகியோரைக் கைது செய்தனா்; சதீஷை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.