FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

லஞ்சப் புகாா்: சீதபற்பநல்லூா் எஸ்.எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!

சீதபற்பநல்லூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மீதான லஞ்சப் புகாரின்பேரில், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

25 அக்டோபர் 2026, 1:34 am
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மீதான லஞ்சப் புகாரின்பேரில், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

சீதபற்பநல்லூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டி(54). இவா், மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க உதவி செய்வதாகக் கூறி, பாலசுப்பிரமணியன் என்பவரிடம் தனது மனைவியின் வங்கிக்கணக்கின் மூலம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க திருநெல்வேலி ஊரக உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments