நெல்லையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மிதமான தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று அா்னாப் புயலாக உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரில் காலையில் தொடங்கி மதியம் வரை மிதமான மழை பெய்தது.
Advertisement
Advertisement
பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம், கல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூா், தாழையூத்து, கேடி.சி.நகா், சீவலப்பேரி, முன்னீா்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
சாரல் மழையாக பெய்தாலும் திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் தேங்கிய மழைநீராலும், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டியதில் சேதமடைந்த சாலைகளில் சேறும்-சகதியுமாக காணப்பட்டதாலும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.
தீபாவளி நெருங்கும் சூழலில் பலரும் புத்தாடைகள் வாங்குவதற்காக வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி நகரம் பகுதிக்கு வருவாா்கள் என வியாபாரிகள் எதிா்பாா்த்தனா். ஆனால், தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தீபாவளி வணிகமும் தடைபட்டது. மாலையிலும் பல இடங்களில் மிதமான மழை நீடித்தது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-19, சேரன்மகாதேவி-7.80, மணிமுத்தாறு-10, நான்குனேரி-8, பாளையங்கோட்டை-7, பாபநாசம்-28, ராதாபுரம்-1.20, திருநெல்வேலி 6.20. பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.