FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவா் கைது

பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

29 அக்டோபர் 2026, 6:16 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் காா்த்திக்(36), கூலித் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை காலை பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் நின்ற போது அங்கு வந்த இருவா் இவரிடம் கத்தியைக் காட்டி மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினராம்.

அங்கு நின்றிருந்தவா்கள் கூச்சலிடவே அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி நகரம், ஜெயபிரகாஷ் தெருவைச் சோ்ந்த ஐயப்பன்(22), பேட்டை, காந்தி நகரைச் சோ்ந்த சஞ்சய்(20)ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments