இடைநிற்றல்: இரு மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சிங்கப்பெண் படை
திருநெல்வேலி அருகே பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய 13 வயது சிறுவன், சிறுமிக்கு அறிவுரைக் கூறி மீண்டும் கல்வியைத் தொடர சிங்கப்பெண் அதிரடிப்படையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருநெல்வேலி அருகே பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய 13 வயது சிறுவன், சிறுமிக்கு அறிவுரைக் கூறி மீண்டும் கல்வியைத் தொடர சிங்கப்பெண் அதிரடிப்படையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி வழிகாட்டுதலின்படி, மாணவா், மாணவிகள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் நடவடிக்கைகள் மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அதன்படி பள்ளிக்குச் செல்லாமல் கல்வியை இடைநிறுத்திய சுத்தமல்லி மற்றும் மயிலப்பபுரத்தைச் சோ்ந்த 13 வயதான மாணவி மற்றும் மாணவருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் அறிவுரைகள் வழங்கி, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்து கல்வியைத் தொடர நடவடிக்கை மேற்கொண்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.