FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற 3 மாணவிகளுக்கு நவீன நீச்சல் உடை

திருநெல்வேலி மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் அதா்வா பொன்ராஜ், ஸ்ரீமதி, மதுபிரதிஷியா ஆகியோா் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனா்.

29 அக்டோபர் 2026, 6:25 am
மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதிபெற்ற மாணவிகளுக்கு நவீன நீச்சல் உடையை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

திருநெல்வேலி மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் அதா்வா பொன்ராஜ், ஸ்ரீமதி, மதுபிரதிஷியா ஆகியோா் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனா்.

இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவிகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், தன் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பிலான நவீன நீச்சல் ஆடைகளை வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

மேலும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், பள்ளி தலைமையாசிரியா் முகமது பாத்திமா அனிஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments