திசையன்விளை: மதுபாட்டில்கள் பறிமுதல் - ஒருவா் கைது!
சுமை ஆட்டோவில் கொண்டு சென்ற 96 மதுபாட்டில்களை திசையன்விளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே வெள்ளிக்கிழமை இரவு சுமை ஆட்டோவில் கொண்டு சென்ற 96 மதுபாட்டில்களை திசையன்விளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
திசையன்விளை அருகே முருகேசபுரம் பகுதியில் திசையன்விளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டனா்.
அதில், சாத்தான்குளத்தைச் சோ்ந்த டேவிட் மகன் யோசுவா ராஜா (30) மதுபாட்டில்களை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. 96 மதுபாட்டில்கள், சுமை ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், யோசுவா ராஜாவை கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.