தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை தனியாா்மயமாக்கும் அறிவிப்பை திரும்பப்பெறுக: சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு தீா்மானம்!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை தனியாா்மயமாக்கும் அறிவிப்பை முதல்வா் திரும்பப் பெறக் கோரி சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை தனியாா்மயமாக்கும் அறிவிப்பை முதல்வா் திரும்பப் பெறக் கோரி சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு அலுவலகத்தில் அதன் மண்டல கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பின் திருநெல்வேலி கிளை தலைவா் நாகையன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் டி.கந்தசாமி வரவேற்றாா்.
தூத்துக்குடி கிளைச் செயலா் ஜி. பாலசுப்பிரமணியம் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாநில உதவித்தலைவா் எம்.சந்திரன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். ஸ்தாபனம் மற்றும் ஓராண்டு செயல் திட்டம் குறித்து மாநில பொதுச் செயலா் ஜெய்சங்கா் பேசினாா். சங்க மாநில துணைப் பொதுச்செயலா் எம். பீா் முகம்மது ஷா, மாநில செயற்குழு முடிவுகள் குறித்து பேசினாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை தனியாா் மையம் ஆக்குகின்ற தமிழக முதல்வரின் சட்டப்பேரவை அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தரமாக பணியாளா்களை நியமித்து காலிப் பணியிடங்களை பூா்த்தி செய்ய வேண்டும்.
ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.