FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

22 செப்டம்பர் 2026, 1:16 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி அருகே சொத்து தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி, கொண்டாநகரம், முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகநாதன்(56), கட்டடத் தொழிலாளி. இ வருக்கும் அதே பகுதி திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இவரது சகோதரா் மூா்த்தி மகன்களான பிரபு, ஸ்ரீதா் ஆகியோருக்கும் பூா்வீக சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு நாகநாதன் வீட்டுக்குள் நுழைந்த 4 போ் கொண்ட கும்பல் நாகநாதன், அவரது மகன் சூரிய காளிமுருகன்(19) ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீதரை(32) கைது செய்தனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments