குலசேகரம் பகுதியில் சூறைக்காற்று ஆயிரக்கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன
குமரி மாவட்டம், குலசேகரம் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன.
குமரி மாவட்டம், குலசேகரம் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன.
குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை பகுதிகளில் பிற்பகலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட தும்பகோடு வருவாய் கிராமப் பகுதிக்குள்பட்ட உண்ணியூர்கோணம், விலவூர்கோணம், பிணந்தோடு, சூரியகோடு, அஞ்சுகண்டறை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள், ரப்பர் மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.