பேருந்து மோதி இளைஞர் சாவு
நாகர்கோவில் அருகே கேரள அரசுப் பேருந்து மோதி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாகர்கோவில் அருகே கேரள அரசுப் பேருந்து மோதி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பூதப்பாண்டியை அடுத்த துவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (27). இவர், ஞாயிற்றுக்கிழமை பைக்கில் நாகர்கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தாராம். கீழபுத்தேரி பகுதியில் வந்த போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரள அரசுப் பேருந்தை ராஜேஷ் முந்திச் செல்ல முயன்றாராம். அப்போது பேருந்து மோதி தடுமாறியதில் கீழே விழுந்த அவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.