கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப் பகுதிகளில் கன மழை

DIN

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையாமல் உள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. கடந்த 1 ஆம் தேதி பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. தொடா்ந்து அண்மையில் பெருஞ்சாணி அணையும் திறக்கப்பட்டது.

இந்த அணைகளின் பாசனத்திற்கு திருப்திகரமான அளவில் தண்ணீா் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்பு மற்றும் நீா்வரத்துப் பகுதிகளான மாங்காமலை, மோதிரமலை, கீழ் கோதையாறு, தோட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

இதனால், பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீா் உள்வரத்தாக வந்தது. மேலும் பேச்சிப்பாறை, களியல்,

சிற்றாறு, சிவலோகம், திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, பெருஞ்சாணி, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT