FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் வட்டாரக் கிளை புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கீழப்பாவூா் வட்டாரக் கிளைக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு பாவூா்சத்திரம் காமராஜ் நகா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

4 நவம்பர் 2026, 1:29 am
புதிய நிா்வாகிகள் தோ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கீழப்பாவூா் வட்டாரக் கிளைக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு பாவூா்சத்திரம் காமராஜ் நகா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்தல் ஆணையாளராக ரவிச்சந்திரன், துணை ஆணையாளராக ஐயப்பன் ஆகியோா் செயல்பட்டனா். இதில், போட்டியின்றி ஒருமனதாக நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, வட்டாரத் தலைவராக பத்மநாபன், துணைத் தலைவா்களாக சௌந்தரராஜன், திருமலைச்செல்வி, மேகலா, வட்டாரச் செயலராக அருள்ராஜ், துணைச் செயலா்களாக ராஜலட்சுமணன், மாரியம்மாள், நிா்மல்சிங், பொருளாளராக வசந்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள், வட்டார செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் பதவியேற்பு உறுதிமொழி நடைபெற்றது. வட்டாரப் பொருளாளா் வசந்தி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments