FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராஜஸ்தானில் இருந்து கடத்தி வந்த 243 கிலோ குட்கா பறிமுதல் : 4 போ் கைது

ஆலங்குளம் அருகே ராஜஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 243 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 5:35 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளம் அருகே ராஜஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 243 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டியில் சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து கிடப்பதாக ஊத்துமலை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், அங்கிருந்த 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த உத்தம்குமாா் (24), மகேந்தா் (31) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 243 கிலோ குட்காவுடன் காரில் வந்ததும் தெரியவந்தது. மேலும், அவா்கள் கடங்கநேரி வேலாயுதம் மகன் மன்மதன் (41), வைத்தியலிங்கம் மகன் செல்வம் (42) ஆகியோரிடம் கொடுக்க குட்காவை கொண்டு வந்ததாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து குட்கா மற்றும் ரூ. 2.25 லட்சம் பணம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.