சங்கரன்கோவிலில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்கக் கோரிக்கை
சங்கரன்கோவில் நகரில் பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கரன்கோவில் நகரில் பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தங்களது மாடுகளை சாலைகளில் மேயவிடுவதால், கூட்டம் கூட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் அவை சுற்றித் திரிகின்றன. மேலும், இரவு நேரங்களில் சாலையிலும் படுத்துக் கிடக்கின்றன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, நகராட்சி, காவல்துறையினா் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement